மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்கி கரோனாவை கையாண்டதை உலகை வியக்கவைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ் இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த பேக்கஜ் திட்டத்தில் வெளிவந்த அறிவிப்பால் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், பெரிய தொழில்நிறுவனங்கள் என அனைத்தும் புத்துயிர் பெரும் என நம்புகிறேன்.