புதுச்சேரி அரசு சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கிவைத்தார்.
துணை ஜிப்மர் மருத்துவமனைக்கு ரூ. 1400 ஒதுக்கீடு! - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் துணை மருத்துவமனை அமைப்பதற்கு புதுச்சேரி அரசு சார்பில் 50 ஏக்கர் நிலம், ரூ. 1400 கோடி ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”கடந்த சில காலங்களில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் மக்களுக்கு வெகுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன” என்றார்.
மேலும், ’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துணை மருத்துவமனை அமைப்பதற்கு புதுச்சேரி அரசு சார்பில் சுமார் 50 ஏக்கர் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டு அதற்காக ரூ. 1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.