மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் ஏற பயணிகளும் ஆயுத்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போது, வெள்ளை நில பேண்ட் மற்றும் சட்டை அணிந்த முதியவர், பிளாட்பாரத்தில் இருந்து இறங்கி தண்டவாளம் நடந்து சென்றார். அப்போது ரயில் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
ரயில் முன்பு பாய்ந்த முதியவர்; காப்பற்றிய ஆர்பிஎஃப் வீரர்! - பாதுகாப்புப் படை வீரர்
மும்பை: தற்கொலை செய்வதற்காக ரயில் முன்பு பாய்ந்து முதியவரை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்து பதற்றமடைந்த பயணிகள், 'ரயில் வருகிறது' என்று சத்தமிட்டனர். ஆனால், அதை காதில் வாங்காத அந்த முதியவர் தண்டவாளத்தில் திடீரென அமர்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சற்றும் யோசிக்கமல் உடனடியாக விரைந்து செயல்பட்டு, ரயில் தண்டவாளத்தில் குதித்து அந்த முதியவரை காப்பாற்றினார்.
நொடிப் பொழுதில் விரைவாக செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கு பயணிகள் வெகுவாக பாராட்டினர். முதியவரை காப்பாற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இணையதளங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.