மேற்கு வங்க மாநிலத்தில் அசன்சோல்-கரக்பூர் ஆகிய ஊர்களை இணைக்கும் மின்சார ரயில் நேற்றிரவு 9.30 மணியளில் மிட்னாபூர் என்ற ஊரை அடைந்தது. அந்த நிலையத்திலிருந்து ரயில் புறப்படும்போது, 43 வயது மதிக்கத்தக்க சுஜோய் கோஷ் என்பவர் ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால், அவர் ரயிலில் ஏறுவதற்கு முற்பட்டார். இருப்பினும், திடீரென்று நிலைதடுமாறிய அவர் நடைமேடையில் விழுந்துவிட்டார். ரயிலின் வேகத்தில் அவர், ரயில் தண்டவாளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டது.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர் தர்மேந்திர குமார் யாதவ் என்பவர் சமயோஜிதமாக செயல்பட்டு, அந்தப் பயணியின் உயிரைக் காப்பாற்றினார்.
ரயிலில் சிக்கவிருந்த வாலிபரை காப்பாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர். ரயில்வே காவலரின் இந்த செயலை அங்குள்ளவர்கள் பாராட்டினர். ரயில்வே காவலர் பயணியைக் காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: இந்திய - அமெரிக்க நட்புறவை பறைசாற்றவுள்ள 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி!