புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அம்மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ். அலுவலர் ராய் பி.தாமஸை நியமனம் செய்துள்ளார்.
அதற்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் பிறப்பித்துள்ளார். அதன்படி ராய் பி.தாமஸ் தேர்தல் ஆணையராக மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்.