தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சமஸ்கிருதம் செத்த மொழி - நாடாளுமன்றத்தை அலறவிட்ட தயாநிதி மாறன்

டெல்லி: சமஸ்கிருதம் செத்த மொழி என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Maran
Maran

By

Published : Feb 10, 2020, 9:15 PM IST

மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, மத்திய சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பாஜக அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்தார்.

திருக்குறளை அடிக்கடி குறிப்பிட்டு பேசும் மத்திய அரசு, உலகின் மிக பழமையான மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், செத்த மொழியான சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக அதிக பணம் ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

தயாநிதி மாறன்

இந்த கருத்துக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து பேசிய மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், "அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால், கடவுள்களின் மொழியான சமஸ்கிருதத்தை விமர்சித்தால் அதனை நாங்கள் ஏற்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்களுக்கெதிரான மத பாகுபாடு வழக்குகளை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்: தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

ABOUT THE AUTHOR

...view details