தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபோக்கள்! - கேரளாவில் ரோபோட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு ரோபோக்கள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றன.

விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபோட்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்திய ரோபோட்கள்

By

Published : Mar 13, 2020, 2:44 PM IST

கேரளாவில் அசிமோவ் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் இரண்டு ரோபோக்களை வைத்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஜெயகிருஷ்ணன் கூறுகையில், “ரோபோக்கள் பொதுமக்களை எளிதில் கவரக்கூடியது, இதன்மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை திறம்பட ஏற்படுத்த முடியும்.

இதன்மூலம் பொதுமக்களுக்கு கையை சுத்தமாக வைத்திருப்பது குறித்தும், வைரஸ் பரவுவது குறித்தும் தெளிவான விளக்கத்தை கொடுக்க முடிகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரளாவில் கொரோனோ குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் புதிய செயலி!

ABOUT THE AUTHOR

...view details