தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வேகமாக பரவி வரும் வைரசை கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
அதேபோன்று வைரசை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவலர்கள் அதிகளவில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பாளர்களுக்கு மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள செவிலியர்கள், மருத்துவர்களுக்குப் பதிலாக, கோலர் என்ற ரோபோக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகம் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.