தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'விசாரணை ஏனென்று மக்களுக்குத் தெரியும்' -பிரியங்கா - robert vadra

டெல்லி : லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா, டெல்லி அமலாக்கத்துறை அலுவகத்தில் இன்றுடன் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் வந்திருந்த பிரியங்கா, தன் கணவர் மீது சுமத்தப்பட்ட மோசடி வழக்கு ஏன் என்று மக்களுக்கு நன்றாகவே புரியும் என தெரிவித்தார்.

நிதி மோசடி

By

Published : Feb 9, 2019, 8:06 PM IST

ராபர்ட் வத்ராவுக்கு லண்டனில் சொந்தமாக வீடு இருப்பதாகவும் அதனை சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற மோசடி செய்து வாங்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வத்ராவிடம் அமலாக்கத்துறை சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தியது.

நிதி மோசடி

அமலாக்கத்துறை விசாரணைக்கு வத்ராவுடன் வந்திருந்த பிரியங்கா காந்தி, வத்ரா என் கணவர்; என் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு எப்போதும் எனது ஆதரவு இருக்கும். என் கணவர் மீது சுமத்தப்பட்ட மோசடி வழக்கிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் விசாரணை ஏன் நடக்கிறது என்பது மக்களுக்கு நன்றாகவே புரியும் என தெரிவித்திருந்தார்.

முன்னதாக, இவ்வழக்கில் அமலாக்கத்துறை தன்மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் வத்ரா முன்ஜாமீன் கோரினார். இந்நிலையில், வருகின்ற 16ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details