தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை: பொதுமக்கள் அச்சம் - அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை

புதுச்சேரி: வெங்கட்டா நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவம்

By

Published : Jul 22, 2020, 3:18 PM IST

புதுச்சேரி நகரப்பகுதியில் வெங்கட்டா நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு உள்ள ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வந்த ஒருவர் தனது குடும்பத்தடன் டெல்லிக்கு சென்று உள்ள நிலையில், நேற்று( ஜூலை 21) அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தலைவர் ரெஜினாபேகம் உடனடியாக பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், காவல் துறை உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில், காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளை அடித்த நபர்களை காவல் துறையினர் தேடி வருகிறன்றனர்.

திருட்டுபோன வீட்டு உரிமையாளர் டெல்லியில் இருப்பதால், கொள்ளை அடிக்கப்பட்ட பணம் - நகைகளின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை அது தொடர்பாக உரிமையாளர் களிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details