கர்நாடக மாநிலம், பெங்களூருவின் புட்டனஹள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீஹரி பிரசாத் என்பவரின் வீட்டில் மூன்று கொள்ளையர் புகுந்துள்ளனர். இதனை உணர்ந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஸ்ரீஹரி பிரசாத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தன் வீட்டிற்கு உடனடியாக வந்த ஸ்ரீஹரி பிரசாத், தன் வீட்டில் உள்ள பொருள்களை கொள்ளையர்கள் காரில் ஏற்றியிருந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனடியாக தன் வீட்டுப் பொருள்களை எடுக்க ஹரி பிரசாத் முயற்சிக்க, கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனிடையே கொள்ளையர்கள் கற்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்.