தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூர் நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி கொள்ளை - காவல்துறையினர் விசாரணை! - பெங்களூர் நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி கொள்ளை

பெங்களூர்: நகைக் கடை ஒன்றில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ வெள்ளியையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

robbers-get-away-with-50-kg-silver-leave-gold-jewellery-untouched
robbers-get-away-with-50-kg-silver-leave-gold-jewellery-untouched

By

Published : Aug 8, 2020, 9:00 PM IST

பெங்களூரில் ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கும்பல் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ வெள்ளியையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், கொள்ளையர்கள் கடையில் இருந்த தங்க ஆபரணங்களைத் கொள்ளையடிக்காமல் சென்றது காவல் துறையினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,"கிழக்கு பெங்களூரின் வைட்ஃபீல்ட் உள்ள இம்மாடிஹள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ள மாதாஜி நகை கடையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இன்று (ஆகஸ்ட் 8 ) கடை உரிமையாளர் கடையைத் திறக்கும் போது கடையில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது. அதில், இரண்டு ஆண்கள் முதலில் ஷட்டரை உடைத்து பின்னர் லாக்கரை உடைத்து, அதிலிருந்த வெள்ளி பொருள்களை திருடி தப்பிச் சென்றது பதிவாகியுள்ளது" என்றார். இதையடுத்து, கடை உரிமையாளர் தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வைட்ஃபீல்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details