நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான வரைவு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் ரயில்களில் கட்டணக் கட்டுப்பாடுகள் கிடையாது - ரயில்வே தனியார் மையம்
டெல்லி : தனியார் ரயில்களில் பயணிக்க கட்டணங்களுக்கான அதிகபட்ச வரம்பு ஏதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில்
இந்நிலையில், தனியார் ரயில்களில் கட்டணக் கட்டுப்பாடுகள் கிடையாது என்றும், அந்தந்த நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ரயில் சேவைகள், பயணிகள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும், ரயில்களின் வேகம், விபத்துக் காலத்தில் விரைவான இழப்பீடு ஆகிய பலன்களும் இதில் உண்டு என ரயில்வே அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.