தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நதிநீர் இணைப்புத் திட்டம் புதிய உந்துதலைப் பெறுகிறது! - மகாராஷ்டிரா

நதிகளை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளது.

River Water Connection Projects Get New Motivation
நதி நீர் இணைப்பு திட்டங்கள் புதிய உந்துதலை பெறுகிறது!

By

Published : Feb 24, 2020, 9:35 AM IST

நதிகளை இணைப்பதில் மத்திய அரசு மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளது. நீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 26ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. முன்னதாக, நதிகளை ஒன்றோடொன்று இணைக்கும் திட்டங்களுக்குத் தேவையான நிதியை 60:40 என்ற விகிதத்ததில், அதாவது 60 விழுக்காடு மத்திய அரசும் 40 விழுக்காடு மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என இருந்தது. தற்போது, அது 90:10 அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இது மாநிலங்களுக்கு இடையேயான திட்டங்களுக்கு மட்டுமல்ல, ஒரே மாநிலத்திற்குள் இரண்டு ஆறுகளை ஒன்றோடொன்று இணைப்பதற்கும் பொருந்தும். ஒரு தனி அதிகாரியை நியமிப்பது, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தும் வங்கிகளிடமிருந்தும் நிதி பெறுவதற்கு உதவும் என்று மத்திய அரசு விளக்கமளித்தது.

நதிநீர் இணைப்புத் திட்டங்கள் புதிய உந்துதலைப் பெறுகிறது

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் என்பது நதிநீர் இணைப்பை மேற்பார்வையிடும் அதிகார அமைப்பாகும். நிபுணர்களுடன் சிறப்புக் குழுக்களை அமைத்தல், விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரித்தல், மாநிலங்களுடன் கலந்தாலோசித்தல், தேவையான ஒப்புதல்களைப் பெறுதல் போன்ற திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் இந்த நிறுவனம் கண்காணிக்கிறது.

பணிச்சுமை மற்றும் நிதி திரட்டுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நீர் சக்தி அமைச்சகம், தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை (நிரா) அமைக்க முடிவு செய்துள்ளது. அக்டோபர் 2019இல், இது தொடர்பான வரைவு மசோதாவை நீர் சக்தி அமைச்சகத்திற்கு, தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அனுப்பியுள்ளது. அந்தத் துறையின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், சில மாற்றங்களுடன் இறுதி அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அமைச்சரவை இறுதி ஒப்புதல் அளித்தவுடன் அது துறை நடவடிக்கைக்கு வரும் என்றும் கூறினர்.

கோதாவரி-காவிரி நதிநீர் இணைக்கும் திட்டம் குறித்த அந்தந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, பங்கேற்கும் மாநிலங்களுக்கு விரிவான மாற்று அறிக்கையை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஒடிசாவின் மகாநதியிலிருந்து கீழே உள்ள கோதாவரி வரை தண்ணீரைக் கொண்டுசெல்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இது சார்ந்துள்ளது.

ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து ஏற்கனவே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த அம்சங்கள் அனைத்தும் 26ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மகாநதியிலிருந்து நீர் திருப்புவதில் தாமதம் ஏற்பட்டதால், தெலங்கானாவின் ஜனபேட்டா முழுவதும் கட்டப்படவுள்ள மற்றொரு திட்டத்திற்கும், 247 டி.எம்.சி.யை காவிரிக்குத் திருப்புவதற்கும் மாநிலங்களின் கருத்தை தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் கோரியுள்ளது, ஆனால் இதுவரை எந்த மாநிலமும் பதிலளிக்கவில்லை.

ஒரே மாநிலத்திற்குள் இரண்டு நதிகளை ஒன்றிணைக்கும் ஒரு பகுதியாக கர்நாடகா முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில் முதன்மை அறிக்கையை தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. துங்கபத்ரா திட்டத்திற்கு தண்ணீரைத் திருப்பி, ராய்ச்சூர் மாவட்டத்திற்கு விடுவிக்க இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. பெட்டி-வர்தா நதிகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு பகுதியாக பட்டனதஹள்ளி, சலமலஹள்ளியில் இரண்டு அணைகளைக் கட்டி, 9 டி.எம்.சி. தண்ணீரை துங்கபத்ரா திட்டத்திற்குத் திருப்பி, வலது கால்வாய் வழியாக ரைச்சூர் மாவட்டத்திற்கு விடுவிக்கும் திட்டம் உள்ளது. மகாராஷ்டிராவும் கோதாவரி ஆற்றின் குறுக்கே ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இதையும் படிங்க : சிகரம் தொட்ட சிறுமிக்கு நரேந்திர மோடி வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details