தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் தலைவரை எதிர்க்கும் கிரிக்கெட் வீரர் மனைவி - எதிர்த்து

காந்திநகர்: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேலை எதிர்த்து ரிவாபா ஜடேஜா போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனைவி

By

Published : Mar 19, 2019, 2:32 PM IST

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா. மார்ச் 3ஆம் தேதி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவில் இணைந்தார். இவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் படேல் சமூக தலைவரும் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்தவருமான ஹர்திக் படேல் ஜம்நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இவரை வீழ்த்த பாஜக ரிவாபா ஜடேஜாவை களமிறக்கப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்திக் படேல் குஜராத்தில் பெரும் தலைவராக வளர்ந்து வருவதால் அவரை வீழ்த்த பாஜக மேலிடத்திலிருந்து குஜராத் மாநில பாஜகவுக்கு அழுத்தம் வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. குஜராத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


ABOUT THE AUTHOR

...view details