நேற்று டெல்லியில் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவைப் போலவே இந்தியாவும் கடுமையான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் அதை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், "இந்தியாவின் வளர்ந்துவரும் மக்கள் தொகையை இரண்டாம் கட்ட புற்றுநோயுடன் ஒப்பிட்டு, அதை கட்டுப்படுத்தாவிட்டால் அது நான்காவது கட்டத்திற்கு சென்று குணப்படுத்த முடியாததாகிவிடும். மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் மதத்தை முன்வைக்கிறார்கள். இது நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு கேடு விளைவிப்பதாகும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதே ஒருவிதமான தேசப்பற்றாகும்" என்று தெரிவித்தார்.