தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: சமூக வலைதளங்களில் வலம்வரும் சுற்றறிக்கை

டெல்லி: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பணம் கொடுத்தால் மருத்துவமனையில் தங்கிக்கொள்ளலாம் என சுற்றறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வலம்வருகிறது.

Corona infection
Corona infection

By

Published : Jun 9, 2020, 2:41 AM IST

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த பட்சம் மூன்று லட்சம் செலுத்தி எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் மருத்துவமனையில் தங்கிக்கொள்ளலாம் என ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த அறிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்ை என்பது குறிப்பிடதக்கது.

அந்த அறிக்கையில் கூறியதாவது, “பொது வார்டில் ஒரு படுக்கைக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் ரூபாய் வசூலிக்கப்படும், தனி அறையில் ஒரு படுக்கைக்கு 50,000 ரூபாய் செலவாகும். இதேபோல் ஐ.சி.யூ படுக்கைக்கு 75,000 ரூபாய் தேவைப்படும், நோயாளிக்கு வென்ட்டிலேட்டர் தேவைப்பட்டால், கட்டணங்கள் ஒரு லட்சம் ரூபாய்வரை உயரும்.

Corona infection

ஒரு அறைக்கு ஒரு லட்சம் ரூபாய் அதிகம் செலவாகும். நோயாளியை மருத்துவமனையின் ஐசியூ வசதிக்கு நேரடியாக அனுமதிக்க வேண்டுமானால் எட்டு லட்சம் ரூபாய் முன்கூட்டியே வசூலிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கையானது சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சரோஜ் மருத்துவ நிறுவனம் ஆகியவற்றின் பெயரைக் கொண்டு பரவி வருகிறது

ABOUT THE AUTHOR

...view details