தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'க்ரைம் இன் இந்தியா' இருளும் வெளிச்சமும்..! - தேசிய குற்ற பதிவு பணியகம்

தேசிய குற்ற பதிவு பணியகத்தின் புள்ளிவிவர தகவல்கள் வெளிப்படுத்துவது பற்றி பகிர்கிறார் கட்டுரையாளர் சஞ்சய் கபூர்

RIOTS - NCRB - By Sanjay Kapoor
RIOTS - NCRB - By Sanjay Kapoor

By

Published : Jan 21, 2020, 10:56 AM IST

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த வன்முறை குற்றச் செயல்களின் ஊடகத் தலைப்புகள் தேசிய குற்ற ஆராய்ச்சி பணியகத்தின் (என்சிஆர்பி) அறிக்கையில் இடம்பெறவில்லை. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வகை குற்றங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
2018ஆம் ஆண்டில் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்கள் பெருமளவு நடந்தது. குறிப்பாக பசுவதை, மாட்டிறைச்சி வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் மீது இந்த வெறுப்புணர்வு குற்றங்கள் ஏவப்பட்டது.

இக்கொலைகளுக்கு பின்னால் வெறுப்புணர்வை தூண்டும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செய்தி தளங்களும் உள்ளன. இதுபோன்ற குற்றங்கள் குறித்து தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை அமைதியாக உள்ளது. பசுவதைக்கு தடை விதித்திருப்பதால் வட இந்திய கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

விற்பனை சந்தைக்கு செல்லும் மாடுகள்

மதவிழிப்புணர்வு பற்றிய பயம், தண்டனை சட்டங்கள் ஆகியவை கிராம மக்களை இதுபோன்ற பயனற்ற விலங்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதை தடுக்கின்றன.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 2016ஆம் ஆண்டு வரை விவசாய கலவரங்கள் என்ற துணைத் தலைப்பு இருந்தது. இந்த தலைப்புகளின் கீழ் 2014ஆம் ஆண்டு 628 வழக்குகள் பதிவாகி இருந்தன. இது 2015ஆம் ஆண்டு 327 சதவிகிதம் அதிகரித்து இரண்டாயிரத்து 683ஆக அதிகரித்தது.

இச்சூழலில் தேசிய குற்ற ஆவண காப்பக குறிப்பிலிருந்து அடுத்தடுத்து சில நீக்கப்பட்டது. இவ்வாறு காணாமல் போகும் வகைகளுக்கு கிடைக்கும் பொதுவான விளக்கம் என்னவென்றால் அந்த குற்ற சம்பவங்கள் கணிசமாக இல்லை என்ற பதில் கிடைக்கும்.

விவசாயம் ஒரு முக்கியமான துறை. ஆனால் இத்துறையில் தற்கொலை அதிகம் நடக்கிறது. 1991ஆம் ஆண்டில் நாடு பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடங்கி பண சாகுபடியை ஊக்குவிக்கத் தொடங்கிய பின்னர் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றது.

இணையதள திருட்டு குற்றங்கள்

அதிக வருமானத்தை எதிர்பார்த்து, அதிக வட்டி விகிதத்தில் கிராம வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கிய விவசாயிகள், பயிர் கெட்டுப்போனாலோ அல்லது பருவமழை பொய்த்துப் போனாலோ பூச்சி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

இந்த தற்கொலைகள் கட்டாயத்தின் பேரில் நடக்கிறது. இதுபோன்ற தற்கொலைகள் குறைந்துவிட்டதாக 2018ஆம் ஆண்டு புள்ளிவிவர தகவல்கள் குறிக்கின்றன. ஆனால் தற்போது வேலையில்லாத இளைஞர்களின் தற்கொலை பெரும்பாலும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லாத இளைஞர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது. அனைத்து அரசியல்வாதிகளும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்து அஞ்சுகின்றனர். 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார் என்று தேசிய குற்ற ஆவண காப்பக பதிவேடு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 94 சதவிகிதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தெரிந்தவர்களாக உள்ளனர். 2018ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 356 ஆகும்.

உன்னாவ் பலாத்காரம், ஆளுங்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்

உண்மையில் இது மிகவும் குறைந்த தகவலே. ஏனெனில் அவமானத்துக்கு பயந்து பலர் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயல்கின்றனர். நமது நாட்டில் பாலியல் வழக்குகள் கையாளப்படும் கொடூரமான மற்றும் உணர்ச்சியற்ற நிலையைப் பார்க்கும் பலரும் காவல் நிலையம் செல்லவே அஞ்சுகின்றனர். பொதுவாகவே பாலியல் வழக்குகளில் காவலர்கள் வெவ்வேறு கண்ணோட்டம் காண்கின்றனர். கிராமப்புறங்களில் இது முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது. 2012 நிர்பயா வழக்கில் நாடே போராடியது. இதற்கு பிறகும் பாலியல் வழக்குகள் மீதான கண்ணோட்டம் மாறாமல் உள்ளது.

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் என்ன போராட்டம் போராடினார் பாருங்கள். அந்த அரசியல்வாதி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர். அங்கு பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த அந்த அரசியல்வாதிக்கு தண்டனை கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முலாயம் சிங் உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், இளவயது இளைஞர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இதனை முலாயம்சிங் தெளிவாக நிராகரித்தார்.

பாலியல் கொடுமை (சித்தரிக்கப்பட்ட காட்சி)

பாரம்பரிய உயர் கலாசார நகரான லக்னோ பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல. பெண்களுக்கெதிரான அதிகம் பாலியல் வல்லுறவு நடக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதில் ஐந்தாயிரத்து 433 பாதிக்கப்பட்டவர்களுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் 19 பெருநகரங்களில் அதிக கொலைகள் நடக்கும் பகுதியாக பாட்னா விளங்குகிறது. இதுபற்றி அம்மாநில காவலர்கள், தங்கள் மாநிலத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த காலங்களை விட குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

நாட்டில் புழக்கத்திலிருந்து போலி ரூபாய் நோட்டுகளைக் களையவே பிரதமர் நரேந்திர மோடி 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். ஆனால் இந்த நடவடிக்கைக்கு பிறகுதான் நாட்டில் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனை 480 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்தது கள்ள நோட்டுக்காரர்களுக்கு பெருமளவு உதவியது.

ரூ.2 ஆயிரம் நோட்டு

இந்தப் பணப் புழக்கம் தற்போது குறைக்கப்பட்டுவருகிறது. மேலும் அச்சிடுவதிலும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் 56 சதவிகிதம் போலி நோட்டுகள் உள்ளன. 2013ஆம் ஆண்டை காட்டிலும் 2016ஆம் ஆண்டில் குற்றம் 35 சதவிகிதம் வரை குறைந்தது. அந்த வகையில் 540 சதவிகிதத்திலிருந்து 379.3 சதவிகிதமாகக் குறைந்தது. 2018ஆம் ஆண்டைப் பொறுத்தமட்டில் 388 சதவிகிதமாக உள்ளது.

அரசிடமிருந்து வெளிவரும் பெரும்பாலான புள்ளி விவரங்கள் உண்மையாக இருந்தாலும், அதில் நெருக்கமான வாசிப்பு தேவை. குற்ற சதவிகிதத்தின் வீழ்ச்சிக்கு கொடூரமான குற்றங்களை மட்டுமே கணக்கில் எடுத்தது காரணமாக இருக்கலாம். இந்த புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துவதைவிட நிறைய மறைக்கப்படுகின்றன. அந்த நோக்கத்தில் அவை வெற்றி பெறுகின்றன.!

இதையும் படிங்க: சென்னையில் ரவுடி கடத்தி கொலை!

ABOUT THE AUTHOR

...view details