”தன்பால் ஈர்ப்பு என்பது குற்றம் அல்ல” என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது. இருப்பினும்கூட, தன்பால் ஈர்பாளர்கள் திருமணம் செய்துகொள்வதில் இந்தியாவில் பல்வேறு சிக்கல்கள் இன்றளவும் நிலவி வருகிறது.
இந்நிலையில், தன்பால் ஈர்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள ஏதுவாக இந்து திருமண சட்டத்தில் சட்டதிருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராகவ் அவஸ்தி, முகேஷ் சர்மா ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.
அதில், "இந்து திருமண சட்டம் 1956 என்பது ஒரு இந்து ஆணுக்கும் ஒரு இந்து பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதில் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு 'இரு இந்துகளுக்கு இடையே' என்று மாற்ற வேண்டும்.