தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மறைந்தார் புரட்சிக் கவிஞரின் மைந்தர்! - Revolutionary poeter Bharathidasan son Mannar Mannan died

புதுச்சேரி: புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மைந்தரான  தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி இன்று பிற்பகல் காலமானார்.

Revolutionary poeter Bharathidasan son Mannar Mannan died in Puducherry
Revolutionary poeter Bharathidasan son Mannar Mannan died in Puducherry

By

Published : Jul 6, 2020, 6:37 PM IST

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும், முதுபெரும் தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி இன்று பிற்பகல் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92.

இவர் தமிழ்நாடு அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.

இவர் மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் . மறைந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர், மொழிப்போர் போராட்டத்தில் சிறை சென்றுள்ளார்.

இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மூன்று மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். புதுச்சேரியில் நாளை மாலை நான்கு மணியளவில் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details