மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், ஹரியானாவில் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசு அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையைப் பெறவில்லை. இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான 78 வயதான சரத் பவார் மற்றும் ஹரியானா காங்கிரசின் ஜாம்பவானான 72 வயதான பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் மீது தேசிய அரசியலின் கவனம் மீண்டும் திரும்பியுள்ளது.
மீண்டும் நிரூபிக்கப்பட்ட சரத் பவாரின் சகாப்தம்:
மகாராஷ்டிராவில் பவாரின் வீழ்ச்சியை எதிர்பார்த்து பாஜக வகுத்த திட்டத்தால் இந்த தேர்தலில், என்சிபி 56 இடங்களை வென்றுள்ளது, கடந்த தேர்தலை விட மேலும் 15 இடங்களை கூடுதலாக பெற்றுள்ளது. தனது கட்சியின் ஈர்க்கக்கூடிய இந்த வளர்ச்சிக்குப் பிறகு பவார் கூறினார்: "ஆணவத்தின் அதிகாரத்தை மக்கள் விரும்பவில்லை” என்று.
பாஜக தலைவர் அமித் ஷா தேர்தலுக்கு முன் கூறியதை பவார் இவ்வாறு குறிப்பிடுகிறார். “நாங்கள் எங்கள் கதவைத் திறந்தால், பவார் தவிர அனைத்து என்சிபி தலைவர்களும் பாஜகவில் இணைவார்கள்" என்று அமித் ஷா கூறினார். மேலும், தேர்தலுக்கு முன்பு பாஜக-சேனாவுக்கு மாறிய என்சிபி தலைவரைப் பற்றி, பவார் இவ்வாறு குறிப்பட்டார்: "மக்கள் இந்த சந்தர்ப்பவாதிகளை விரும்பவில்லை." அத்தகைய துரோகிகள் தேசியவாத காங்கிரஸின் கோட்டைகளான மேற்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார்கள் என்றார் .
இதையும் பாருங்க: இதெல்லாமாயா சடங்கு: ஒருவர் மீது ஒருவர் கல்லை எறிந்த பக்தர்கள்!
எதிர்க்கட்சி பிரசாரத்தை மகாராஷ்டிராவில் பவார் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசில் மோதல்கள் மற்றும் ஒரு வலுவான மாநிலத் தலைமை இல்லாத குறை மகாராஷ்ட்ராவில் இருந்தது. இத்தகைய நிலையில்தான் சதாராவில் பொது கூட்டத்தில் கொட்டும் மழையிலும் சரத் பவார் தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தினார். கொட்டும் மழையில் நனைந்துகொண்டு அவர் செய்த பரப்புரை வீடியோ சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் வைரலாகியது; இந்த தேர்தல் பிரசாரத்தில் இது அவரின் செல்வாக்கை மேலும் வெளிச்சமிட்டுக் காட்டியது.
அனுபவமுள்ள அரசியல்வாதியான பவார் தனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை தனது சொந்த செல்வாக்கால் முறியடித்தார், “மகாராஷ்டிரா, சிவாஜி மகாராஜாவின் நிலம். இது ஒருபோதும் டெல்லிக்கு முன் தலைவணங்காது." ”மக்கள் தாக்குதல்களை வெறுக்கிறார்கள், இதற்கு எப்போது பதிலளிக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றார். தொடர்ந்து அதற்கான விடையை மாநில மக்களிடமே விட்டுவிட்டார்.