புதுச்சேரி கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், நகராட்சி, பஞ்சாயத்து அதிகாரிகள், காவல் துறையினர், துணை தாசில்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், "பொதுமக்களிடம் கரோனா நோய் குறித்த அச்சம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால் தகுந்ந இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக் கவசங்களை அணிவதில் மக்கள் அக்கறை செலுத்தவில்லை.