தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா வைரஸ் அச்சம்: எல்லை கொடியேற்ற நிகழ்வுகளில் மாற்றம்

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் கொடியேற்ற விழா நடைமுறையில் தற்காலிக மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Wagh
Wagh

By

Published : Mar 8, 2020, 12:12 PM IST

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பொதுவெளியில் அதிகம் கூடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இதையடுத்து ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தை தவிர்த்துகொள்வதாக பிரதமர் மோடி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இந்தியாவில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் நாள்தோறும் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வில் தற்போது தற்காலிக மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் இங்கு மேற்கொள்ளும் கொடியேற்ற நிகழ்வும், அணிவகுப்பும் மக்களின் பார்வையில் சிறப்பாக நடைபெறும். நாள்தோறும் நடைபெறும் இந்நிகழ்வில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பார்வையாளர்கள் வரை பங்கேற்பார்கள்.

இன்று முதல் இந்நிகழ்வானது பொதுமக்கள் இன்றி நடைபெறும் என்று எல்லைப் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் இம்முடிவு தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆதரவற்ற முதியோருக்கு அன்புச் சேவை புரியும் பாக்கியரதி ராமமூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details