தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனா தொற்றால் ஓய்வு பெற்ற காவலர் உயிரிழப்பு

புதுச்சேரி: கரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற காவலர் இன்று (ஜூன் 28) உயிரிழந்தார்.

Retired police officer died
Retired police officer died

By

Published : Jun 28, 2020, 7:24 PM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற 61 வயது காவலர் சிகிச்சை பலனின்றி இன்று( ஜூன் 28) உயிரிழந்தார்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அங்கு 11ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ( ஜூன் 28) 20 பேர் கதிர்காமம் அரசு மருத்துவமனையிலும் ஆறு பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் இரண்டு பேர் புதுச்சேரி ஏனாம் பிராந்திய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 648 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருவார்கள் 385 பேர், இதுவரை 252 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் . ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த எட்டு பேர் காரைக்காலில் ஒருவர் என இன்று 31 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details