தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் - அரசு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு - உச்ச நீதிமன்றம் கரோனா பாதிப்பு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ஓராண்டுக்கு நிறுத்திவைத்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக முன்னாள் ராணுவ மேஜர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

SC
SC

By

Published : Apr 25, 2020, 11:19 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ஓராண்டிற்கு நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் ராணுவ மேஜர் ஓன்கார் சிங் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசு நிதிச்சுமை காரணமாக இந்த முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால், பேரிடர் காலத்தில் கூட பெருந்தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வழக்கம் போல் சலுகைகள் பெற்றுவரும் நிலையில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை நிறுத்திவைப்பது எந்தவிதத்தில் நியாயம் என மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் ஜூலை 2020, ஜனவரி 2021ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது அறிவிக்கப்பட்ட 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வும் நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ரூ.37,530 கோடி மிச்சப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அடிப்படையிலேயே மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும். எனவே இந்த அறிவிப்பின் மூலம் மொத்தமாக மத்திய மாநில அரசு நிதியில் 1.20 லட்சம் கோடி சேமிக்கப்படும் என நிதித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வங்கி சேமிப்புத் தொகை 9.45% உயர்வு - ரிசர்வ் வங்கி தகவல்

ABOUT THE AUTHOR

...view details