தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முஹர்ரம் ஊர்வலம் - காஷ்மீரின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு

காஷ்மீர் : 10 நாள்கள் கொண்டாடப்படும் முஹர்ரம் பண்டிகையின் எட்டாவது நாள் ஊர்வலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

uha
muha

By

Published : Aug 28, 2020, 7:23 PM IST

முஸ்லிம்களின் இஸ்லாமிய காலண்டரின் முதல் மாதமாக வருவது முஹர்ரம். இதன் 10ஆவது நாள் முஹர்ரம் தியாகத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இப்பண்டிகையின் எட்டாவது நாளில் காஷ்மீரின் குறிப்பிட்ட சில பகுதிகள் வழியாக மக்கள் ஊர்வலம் செல்வது வழக்கம். ஆனால், கடந்த 1960ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் தாக்குதல் காரணமாக அப்பகுதியில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறை நீதிமன்றம் (சிஆர்பிசி) பிரிவு 144இன் கீழ் புட்கம், பாரமுல்லா மாவட்டங்கள், ஸ்ரீநகரின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் மக்கள் நடமாடவும், கூட்டங்கள் நடத்தவும் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "ஸ்ரீநகரில் ஷாஹீத் குஞ்ச், எம்.ஏ.ரோடு, ராம் முன்ஷி பாக், மைசுமா, படமலூவின் சில பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் கடைகள், பிற வணிக நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில தனியார் வாகனங்கள் ஓடுவதைக் காண முடிந்தது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details