தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 நோயாளிகளுக்காக உணவக உரிமையாளர் தயார் செய்த ரோபோட்

கவுகாத்தியில் உணவக உரிமையாளர் ஒருவர், சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவவும், மருத்துவர்களிடன் மெய்நிகர் சந்திப்பை எளிதாக்கவும் ரோபோக்களை மறுவடிவமைத்துள்ளார்.

By

Published : Jun 20, 2020, 7:42 PM IST

Corona robot
Corona robot

கவுகாத்தி : அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உணவக உரிமையாளர் எஸ்.என். ஃபரித் என்பவர், கோவிட் -19 நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், மருத்துவர்களுடன் மெய்நிகர் சந்திப்பை எளிதாக்குவதற்கும் ரோபோக்களை வடிவமைத்துள்ளார்.

"நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை வழங்க 1.5 ஆண்டுகளாக ரோபோக்களைப் பயன்படுத்துகிறோம். சுகாதார நிபுணர்களுக்கு உதவுவதற்காக தற்போது நான் அவற்றை மறுவடிவமைப்பு செய்தேன்" என்று ஃபரித் கூறினார்.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இக்கால சூழலில் ரோபோட் ஒரு தவிர்க்க முடியாத தகவல் சாதகமாக மாறியிருக்கிறது. கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மருத்துவப் பணியாளர்களுக்காக ரோபோக்களை உருவாக்கி வருகின்றனர்.

Corona robot

கேரள மாநிலம் கண்ணூரில், நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க அஞ்சாரகண்டியில் உள்ள மாவட்ட கரோனா மையத்தில் ஒரு ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனிமை பிரிவுகளில் நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் உணவை வழங்கக்கூடிய ரோபோக்களைப் பயன்படுத்த ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் திட்டமிட்டுள்ளன.

அஸ்ஸாமில் 102 புதிய கோவிட் -19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,006ஆக உள்ளது. இதில் 1,928 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 3066 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒன்பது பேர் இதுவரையில் இந்நோயின் காரணமாக இறந்துள்ளனர் என அஸ்ஸாம் சுகாதார அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details