தெலங்கானாவில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசு, அம்மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தி மேம்படுத்தியதாலேயே இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே. டி. ராமாராவ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்திலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, ஈ டிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், ”முந்தைய தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் உள்ளாட்சித் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.