தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி பேரவையில் தீர்மானம்! - புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

புதுச்சேரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Puducherry assembly
Puducherry assembly

By

Published : Feb 12, 2020, 9:47 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அப்போது, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான புருஷோத்தமன், ராமநாதனின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் நாராயணசாமி பேசத் தொடங்கினார். இதற்கு, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக புதுச்சேரி அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது.

Puducherry assembly

இதன் தொடர்ச்சியாக, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக, 70ஆவது இந்திய அரசியல் அமைப்பு சட்ட நாள் விழா சிறப்பாக கொண்டாடவும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதையடுத்து சபாநாகர் சிவகொழுந்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு காலையில் விடுமுறை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details