மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தமிழ் சட்டப்பேரவை உறுப்பினர், கேப்டன் ஆர் தமிழ்செல்வன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூன்று நாட்களுக்கு முன்னர் இங்கிருந்து தமிழ் மக்கள் தமிழ்நாட்டிற்கு செல்வதற்காக, 90அடி காவல் நிலையத்தில் பதிவுகள் செய்யப்பட்டன. ஆனால் சில குளறுபடிகள் காரணமாக, அப்போது அறிவிக்கப்பட்ட ரயில் தமிழ்நாடு செல்லவில்லை.
தமிழர்களுக்கு வழிகாட்டிய மும்பை தமிழ் பாஜக எம்.எல்.ஏ! - two trains from mumbai to night
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தமிழ் சட்டப்பேரவை உறுப்பினர், கேப்டன் ஆர் தமிழ்செல்வன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டுக்கு திரும்பும் மக்கள் எந்தெந்த வண்டிகளில், எத்தனை மணிக்கு பயணிக்கலாம் என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்களிடம் பேசி ரயில் விடுவதற்கான கோரிக்கை வைத்தேன். அதனையடுத்து ரயில் வர அனுமதிக்கப்படும் என அரசு உறுதியளித்ததை அடுத்து, இன்று இரவு 10:15 | 11:30 மணிக்கு விக்டோரியா ரயில் முனையத்திலிருந்து இரண்டு ரயில்கள் தமிழ்நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறது.
இதில் 90 அடி காவல் நிலையத்திலிருந்து பதிவுசெய்த பயணிகள் 10:15க்கு புறப்படும் வண்டியிலும், சாஹு நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்தவர்கள் இரவு 11:30க்கு புறப்படும் வண்டியிலும் தங்கள் ஊர்களுக்குச் செல்லலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.