தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்ப்பிணிகளுக்கு  தனி அறைகளை ஒதுக்க கோரிக்கை

பெங்களூரு: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவமனையின் அனைத்து அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Request for a separate ward and treatment by pregnant women
Request for a separate ward and treatment by pregnant women

By

Published : Apr 25, 2020, 5:06 PM IST

Updated : Apr 25, 2020, 8:33 PM IST

நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவமனையிலுள்ள பெரும்பாலான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் புற நோயாளிகளுக்கும், பரிசோதனைகள் மேற்கொள்ள வருபவர்களை கவனிப்பதற்கும் தகுந்த அறைகள் இன்றி பெரும்பாலான மருத்துவமனைகள் தவித்துவருகின்றன.

கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.சி பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்துள்ள நிறைமாத கர்ப்பிணிகள், பரிசோதனை மேற்கொள்ள போதிய வசதிகளின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாங்கள் குறை சொல்லவில்லை என்றும், இவ்வாறான அசாதாரண சூழலில் தங்களைப் போன்றோருக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவமனை

Last Updated : Apr 25, 2020, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details