குடியரசு தின கொண்டாட்டங்கள் காரணமாக ஜனவரி 18, 20, 24, 26 ஆகிய நாள்களில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள்வரை எந்த விமான நடவடிக்கைகளும் நடைபெறாது என்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) வெளியிட்டுள்ள ஏர்மேன் (நோட்டாம்) அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வருகிற 18, 20 ஆகிய தேதிகளில் காலை 10.35 மணிமுதல் மதியம் 12.15 மணிவரை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 'தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும்' விமானங்கள் அனுமதிக்கப்படாது.