இந்திய - சீன ராணுவங்களுக்கிடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் எல்லைப்பகுதி மற்றும் அஸ்ஸாம் மாநில எல்லைப்பகுதியிலும் வசிக்கும் கிராம மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறுவதாக அண்மையில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, அருணாச்சல பிரதேசத்தில் மான் வேட்டைக்கு காட்டிற்குள் சென்ற நாச்சோ கிராமத்தின் தாகின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, ஐந்து பேரை சீன ராணுவம் பிடித்துச் சென்றதாக அப்பகுதியின் மக்களவை உறுப்பினர் தபீர் காவ் தெரிவித்திருந்தார்.
மேலும், சீனா - அருணாச்சல பிரதேச எல்லையில் அமைந்துள்ள மேக்மோகன் கோட்டில் பதற்றம் நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன. இதனிடையே, எல்ஏசி அருகிலுள்ள கிராம மக்கள் குறித்து வெளியாகும் செய்தி சித்தரிக்கப்பட்டவை. இதுபோன்ற வதந்திகளுக்கு அஸ்ஸாம், அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் வாழும் மக்கள் செவி சாய்க்க வேண்டாம் என மக்கள் தொடர்புத்துறை மற்றும் பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் சீனா அத்துமீறல்! ஐந்து இந்தியர்களைப் பிடித்துச் சென்ற சீன ராணுவம்