தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதா? - delhi news updates

டெல்லி: சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என வெளிவரும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

reports-claiming-major-earthquake-may-hit-delhi-are-baseless-say-experts
டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பது முற்றிலும் ஆதாரமற்ற தகவல்

By

Published : Jun 5, 2020, 6:36 PM IST

டெல்லி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக லேசானது முதல் மிதமான நிலநடுக்கும் தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது. இதனால், சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லியில் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் உலா வருகிறது. அவை முற்றிலும் ஆதாரமற்றது என புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் நிலநடுக்கம் ஆய்வு பிரிவைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ், ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில்,

"டெல்லியில் ஏற்பட்ட சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒரு சக்திவாய்ந்ததாக மாறும் என்று கூறுவது தவறான தகவல். இதனை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க இயலாது. ஆகையால், நிலநடுக்கம் குறித்து உலாவரும் இந்த வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

ரோதக் நகரம், மகேந்திரகார், தேராதூன், நொய்டா, மதுரா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோலின் வீதம் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டுள்ளது. ஏப்ரல் 12இல் இருந்து மே 29ஆம் தேதி வரை டெல்லியில் 10 நிலநடுக்கம் பதிவாகிவுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details