ஆந்திர மாநிலம், சந்திரகிரி சட்டப்பேரவைத் தொகுதி, சித்தூர் மக்களவை தொகுதியிலும் ஐந்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு மே. 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.
மறுவாக்குப்பதிவை எதிர்க்கும் சந்திர பாபு நாயுடு - சந்திரகிரி சட்டபேரவை தொகுதி, சித்தூர் மக்களவை தொகுதி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஐந்து வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
chandra babu naidu
இதுகுறித்து அவர் கூறுகையில், "இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். தேர்தல் ஆணையம் ஜனநாயகத்துக்கு எதிராக ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது" என்றார். தமிழ்நாட்டிலும் மே.19ஆம் தேதி மறுவாக்குபதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.