தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஞானபீட விருதுபெற்ற மலையாள கவிஞர் அகிதம் அச்சுதன் நம்பூதிரி காலமானார் - இலக்கிய உலகின் முன்னோடி கவிஞரான அகிதம் அச்சுதன் நம்பூதிரி

இந்திய இலக்கிய உலகின் உயரிய விருதான பாரதிய ஞானபீட விருது பெற்ற மலையாள கவிஞர் அகிதம் அச்சுதன் நம்பூதிரி இன்று காலமானார்.

Achuthan Namboothiri
Achuthan Namboothiri

By

Published : Oct 15, 2020, 12:29 PM IST

மலையாள இலக்கிய உலகின் முன்னோடி கவிஞரான அகிதம் அச்சுதன் நம்பூதிரி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 94 வயதான அச்சுதன் நம்பூதிரி திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்றுவந்தார்.

1926ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்தார். கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ள இவர், நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளார்.

இந்திய இலக்கிய உலகின் உயரிய விருதான பாரதிய ஞானபீட விருது 2019ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற ஆறாவது மலையாள இலக்கியவாதி ஆவர். மேலும், சாகித்ய அகாதமி, எழுத்தச்சன், வயலார் உள்ளிட்ட விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

தீண்டாமை ஒழிப்பில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் பளியம் சத்தியகிரகப் போராட்டத்தில் பங்கேற்றவர். இவரது மனைவி ஸ்ரீதேவி கடந்தண்டு உடல் நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஏர் இந்தியா மோசமான நிதி சுமையைச் சந்தித்துவருகிறது - ஹர்தீப் பூரி

ABOUT THE AUTHOR

...view details