தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அத்தியாவசிய சேவைகளிலிருந்து தபால் துறையை நீக்க வேண்டும் - திமுக எம்பி ராசா - அத்தியாவசிய சேவைகளிலிருந்து தபால் துறையை நீக்க வேண்டும்

டெல்லி: அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்ட காரணத்தால் அத்தியாவசிய சேவைகளிலிருந்து தபால் துறையை நீக்க வேண்டும் என திமுக எம்பி ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

Raja
Raja

By

Published : Mar 27, 2020, 11:50 PM IST

கரோனா வைரஸ் நோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு 21 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவை துறைகள் மட்டும் இயங்கிவருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தபால்துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இப்பட்டியலில் இருந்து தபால் துறையை நீக்க முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசா பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்த கோரிக்கையில், "ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால், தபால் துறை ஊழியர்கள் தங்களின் பணியை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டுவருகின்றனர். எனவே, அத்தியாவசிய சேவைகளிலிருந்து தபால் துறையை நீக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸின் நுண்ணியப் படம் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details