இந்தியாவின் 'மக்கள் குடியரசுத் தலைவர்' (People's President) என்று அன்புடன் அழைக்கப்படும் அப்துல் கலாமின் தந்தை ஒரு படகை மட்டுமே சொத்தாகக் கொண்டிருந்தார்.
இளம் வயது முதலே கடும் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருந்த கலாம் தனது ஐந்தாவது வயதில் செய்தித்தாள் விற்கும் சிறுவனாகப் பணிபுரிந்து தனது குடும்பத்தினருக்கு உதவியாக இருந்தார்.
கலாம் வாழ்க்கையின் சுவாரஸ்சியமான அம்சங்கள்
- இளம் வயதிலிருந்தே கலாமிற்கு இயற்பியல், கணிதத்தின் மீது தீராத ஆர்வம் இருந்தது.
- 1954ஆம் ஆண்டு திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கலாம், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டார்.
- இந்திய விமானப் படையின் போர் விமானியாகப் பணிபுரிய ஆர்வம் கொண்டிருந்த அப்துல் கலாம் அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார்.
- போர் விமானித் தேர்வில் போட்டியிட்டார் அப்துல் காலம். மொத்தம் எட்டுப் பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், ஒன்பதாவது இடமே அவருக்கு கிடைத்தது.
- பின்னர் 1960ஆம் ஆண்டு, டி.ஆர்.டிஓ. நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்து.
- 1969ஆம் ஆண்டு எஸ்.எல்.வி. திட்டத்தின் இயக்குனர் பொறுப்பு அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்டது. இதை வெற்றிகரமாக வடிவமைத்து ரோஹினி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
- பெலஸ்டிக் மிசைல் திட்டங்களை வெற்றிகரமாக வடிவமைத்து பாதுகாப்புத்துறைக்கு பெரும்பங்காற்றியவர் அப்துல் கலாம். இதையடுத்து அவர் மிசைல் மேன் என பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
- இந்தியா அணுசக்தித்துறையின் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படும், 1998 பொக்ரான் அணு குண்டு சோதனை வெற்றிகரமாக நடைபெற அப்துல் கலாம் பெரும்பங்காற்றினார்.
- 1981ஆம் ஆண்டு பத்ம பூஷண், 1990ஆம் ஆண்டு பத்ம விபூஷண் தொடங்கி நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1997ஆம் ஆண்டு பெற்றார்.
- நாட்டில் உள்ள 40 பல்கலைகழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
- இவரது வாழ்க்கையை மையமாக வைத்து I Am Kalam என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தலைவராக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவரது எளிமையான பண்பின் காரணமாக மக்கள் ஜனாதிபதி எனப் போற்றப்பட்டார்.
- குழந்தைகள், மாணவர்கள் மீது பெரும் அன்பு கொண்ட அப்துல் கலாம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களை தொடர்ச்சியாக நேரில் சந்தித்து உரையாடி வந்தார்.
- "நீங்கள் உங்களை மக்கள் எவ்வாறு நினைவில் வைத்திருக்க விரும்புகிறீர்கள்?" ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் முதலில் என்னை ஆசிரியராகவே அடையாம் காண விரும்புகிறேன் எனக் கூறினார் கலாம்.
- அப்துல் காலம் சுவிட்சர்லாந்து பயணம் செய்த தேதியை அந்நாடு அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறது.
- தமிழ் சங்க இலக்கியங்களில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த கலாம், வீணை வாசிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
- அக்னி சிறகுகள், மிஷன் இந்தியா, லைஃப் ஆஃப் ட்ரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை கலாம் எழுதியுள்ளார்.
தனது இறுதி நாளில், மெகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.இல் மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். தனது இறுதி நொடியின்போதும் தனக்கு பிடித்தமான மாணவர்களிடம் ஆசிரியராகவே உரையாடிக் கொண்டே இந்த மண்ணைவிட்டு மறைந்தார் கலாம்.
இதையும் படிங்க:"இந்தியா வாரியணைத்துக்கொண்ட தமிழ்ப் புதல்வன் அப்துல்கலாம்!"