தற்போதைய பொதுச் சுகாதார அவசரநிலை காரணமாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ.) அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை ரெம்டெசிவிருக்கு வழங்கியுள்ளது. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்றும், இதனை மருத்துவப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் 23ஆவது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் கிலியட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா உயிரிழப்பைக் குறைக்கும் ரெம்டெசிவிர்! - பொது சுகாதார அவசரநிலை
நியூயார்க்: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர், இறப்பு விகிதத்தை 62 விழுக்காடு குறைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கரோனா உயிரிழப்பை குறைக்கும் தடுப்பு மருந்து ரெமிடிசிவர்
ரெம்டெசிவிர் இறப்பு அபாயத்தை 62 விழுக்காடு குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 74.4 விழுக்காட்டினர் ரெம்டெசிவிர் சிகிச்சையில் 14ஆம் நாளில் குணமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சீரற்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்குத் தொடர்ச்சியாக ரெம்டெசிவிர் வழங்கப்பட்டபோது, அவர்கள் 11 நாள்களில் குணடமடைந்தனர். இதனால் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.