இந்தியாவில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்ய வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மார்ச் 20ஆம் தேதி லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை நிராகரித்து பேசிய நீதிபதி, நீரவ் மோடிக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர் தப்பிக்க வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாகவும்,மார்ச் 29 வரை காவல் நீட்டிப்பு வழங்கியும்உத்தரவு பிறப்பித்துள்ளார்.