தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு! - நீரவ் மோடி காவல் நீட்டிப்பு

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட நீரவ் மோடிக்கு நவம்பர் 11ஆம் தேதிவரை காவல் நீட்டித்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nirav Modi

By

Published : Oct 17, 2019, 5:56 PM IST

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.

பின்னர், அமலாக்கத் துறையினர் கொடுத்த புகாரின்பேரில் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்துவருகிறது. வங்கி மோசடி வழக்கில், நீரவ் மோடிக்கு அவரது சகோதரர் நேஹல் மோடி உதவியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக உலக நாடுகளுக்கு இந்தியா கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கு, ரெட் கார்னர் நோட்டீஸ் எனப்படும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நீரவ் மோடி இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி நினா டெம்பியா, நீரவ் மோடிக்கு நவம்பர் 11ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டார். பிணை வழங்கினால் நீரவ் மோடி தலைமறைவாவதற்கு சாத்தியம் இருப்பதாகக் கூறிய நீதிமன்றம், நான்கு முறையும் அவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

ABOUT THE AUTHOR

...view details