மத்திய அரசு அறிவித்த அன்லாக் - 1 தளர்வுகளின்படி வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுகின்றன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாது. பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் மக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் எனும் வெப்ப அளவீட்டுக்கருவி கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவதோடு சானிடைஸர் அளிக்க வேண்டும். குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணித்திருக்க வேண்டும். மக்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு நடத்த வேண்டும்
பொதுவெளிகளில் பிரசங்கம், பொதுக்கூட்ட பிராத்தனைகளை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், பொது இடங்களில் அன்னதானம் வழங்குவது, தீர்த்தம் தெளிப்பது அறவே கூடாது. முடிந்தவரை 65 வயதுக்கு மேற்பட்டோரும் 10 வயதுக்கு உட்பட்டவர்களும் வழபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். போதிய இடைவெளியில் மத வழிபாட்டு வளாகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.