தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - Release of Karaikal Draft Voter List

புதுச்சேரி: காரைக்காலில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் விக்ராந்த் ராஜா வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

By

Published : Feb 8, 2020, 5:14 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி திருபட்டினம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா, அனைத்துக் கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

மாவட்டத்தின் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் 72,549 ஆண்கள், 84,185 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,56,751 வாக்காளர்கள் உள்ளனர்.

18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளராக தங்களை சேர்ந்துக் கொள்ளவும், வாக்காளர் அட்டையில் உள்ள பெயர்களை திருத்தம் செய்யவும் தாலுகா அலுவலகம், தேர்தல் ஆணைய இணையதளமான National Voter's Service Portal ஆகியவற்றில் பதிவு செய்யலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க:புதுவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details