கரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உலக அளவில் இடம்பெயர்ந்திருக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், கேரள அரசு இதற்கு முன்னோடியாக ஒரு வலைதளத்தை நேற்று தொடங்கியுள்ளது.
அதில், வெளிநாட்டிலிருந்து தமது தாயகம் திரும்ப விரும்பும் கேரளத்தவர்கள் அனைவரும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தோருக்காக அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான நோர்கா-ரூட்ஸ் நிறுவனத்தின் www.norkaroots.org-இல் இதற்காக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நோர்கா-ரூட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடுகளில் உள்ள கேரள மக்களுக்கான இந்த சிறப்பு ஏற்பாட்டில் பதிவு செய்தவர்களை தனிமைப்படுத்தப்படுவதற்கு மாநில அரசு உதவும்.
நாடு திரும்புபவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் கண்டறிதல் சோதனைக்குள்ளாக்கப்படுவார்கள். கோவிட்-19 அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். மற்றவர்கள் தற்போதைய மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் தனிமைப்படுத்தப்படுவார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் கூற்றுப்படி, கேரளாவில் உள்ள பல்வேறு விடுதிகள், உணவகங்கள், அரங்குகள், தங்குமிட வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவமனைகள், ஆலப்புழாவில் மிதக்கும் படகு இல்லங்கள் இதற்காக பயன்படுத்தப்படும். இந்தக் கரோனா வைரஸ் பராமரிப்பு மையங்கள் பல இலவசமாக இயக்கப்படும். அதேவேளையில், தனித்த வசதிகளை விரும்புவோர் செலுத்த அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்” என கூறியுள்ளது.
நாடு திரும்பும் கேரள மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ள பினராயி அரசு! அதில், 25 லட்சம் கேரளத்தவர்களில் 90% பேர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரித்து வருகின்றனர். 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் பேர் விமான சேவைகளின் மூலமாக நாடு திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க :ஊரடங்கு நீட்டிப்பா...? தொடங்கியது ஆலோசனை