கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு ரெட் அலர்ட்! - rain
திருவனந்தபுரம்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
![கேரளாவுக்கு ரெட் அலர்ட்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4073313-thumbnail-3x2-rain.jpg)
Red alert
அதையடுத்து கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்பதால் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுபவர்களையும் தயார் நிலையில் இருக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.