டெல்லி: மத்திய ஆயுத காவல் படையின் 31ஆவது பிரிவு, மூன்று மாதங்களுக்கு முன் கோவிட்-19 தொற்றின் மையமாக இருந்தது. தற்போது அங்கு சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் மீண்டு, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர். இவர்கள் முன்னதாக ஒரு பத்திரிகையாளர், இரண்டு நபர்கள் ஆகியோருக்கு பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கோவிட்-19 மையமாக இருந்து பிளாஸ்மா தான மையமாக மாறிய மத்திய ஆயுத காவல் படைப்பிரிவு!
மத்திய ஆயுத காவல் படையின் 31ஆவது பிரிவில் இருந்து, மீண்ட பல கோவிட்-19 வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்து தங்களை நிரூபித்து வருகின்றனர். இவர்கள் முன்னதாக ஒரு பத்திரிகையாளருக்கும், இரண்டு நபர்களுக்கும் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
plasma donation
தற்போது இப்பிரிவு பிளாஸ்மா தான மையமாக மாறி இருக்கிறது. 31ஆவது படைப்பிரிவு மட்டுமல்லாது, மத்திய ஆயுத காவல் படையில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4,000 வீரர்களும் தற்போது கொடையாளர்களாக மாறி இருக்கின்றனர்.