அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு குறித்து இந்து அமைப்பு ஒன்று தன் மனுவில், "அயோத்தியா புனிதமான இடம். பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை பெற்ற இடம். அங்கு சிலை, கோயில் இல்லை என்றபோதிலும் அந்த இடம் முக்கியத்துவம் பெறுகிறது.
மசூதி கட்டுவது நீதிக்கு எதிரானது - அயோத்தியா வழக்கில் இந்து அமைப்பு வாதம் - அயோத்தியா வழக்கு
டெல்லி: இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவது நீதிக்கு எதிரானது என அயோத்தியா வழக்கு குறித்து இந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.
இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்டுவது இந்து தர்மத்திற்கு எதிரானது மட்டுமல்ல இஸ்லாமிய சட்டத்திற்கும் ஒட்டுமொத்த நீதிக்கும் எதிரானது. சர்ச்சைக்குரிய இடம் முழுவதையும் ராமர் கோயில் கட்ட ஒதுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை ஏற்று சன்னி வக்பு வாரியம் வழக்கைத் திரும்பப்பெறவுள்ளதாக தகவல் வெளியானது. அயோத்தியா வழக்கைத் தொடர்ந்த மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளன. இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றதில் சன்னி வக்பு வாரியம் மிக முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.