மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.
அவருடன் ஆதரவாளர்கள் ஆறு அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏ.க்களும் கட்சியிலிருந்து விலகினர். இதையடுத்து சிந்தியா பாஜகவில் இணைந்தார். இதனால் கமல்நாத் அரசு கவிழும் சூழலுக்கு தள்ளப்பட்டது.
தற்போது எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அவையை மார்ச் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.