கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் தொடர்ந்து இணைந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தற்போது ஹரியானாவில் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜெய்சல்மேரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியில் சேர விருப்பமுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மனேசரில் ஹரியானா காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் அங்கிருந்து வந்தால் மட்டும் கட்சியில் மீண்டும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும்.