கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக, அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கு மன அழுத்தத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் என்ன செய்வது என்று தெரியாமல் பல பேர் தினசரி வித விதமான உணவுகளை சமைத்து சாப்பிடுகின்றனர்.
இதன் எதிரொலி எடை அதிகரிப்பு. நீங்கள் உண்ணும் உணவு அல்லது திரவங்களின் நுகர்வு அதிகரிக்காவிட்டாலும் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. இதுவே தற்காலிக எடை அதிகரிப்பு எனப்படுகிறது. இது அவ்வப்போது, தொடர்ச்சியாக அல்லது விரைவாக நடக்கிறது.
தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் இந்த எடை அதிகரிப்பை நாம் தடுக்கலாம். தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்கள் இங்கே,
1 .சர்க்கரை சோடா: சர்க்கரை சோடாவை உட்கொள்ளும் நபர்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் உடல் பருமன் ஆனது, நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்ற பல நோய்களுடன் தொடர்புடையது. சர்க்கரையுடன் கூடிய சோடாக்கள் உடலுக்கு எந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்காது.